திருமூலர் வரலாறு
சித்தர்களில் முதன்மையானவர்.சிவ பெருமானிடமும் ,நந்த தேவரிடமும்
உபதேசம் கிடைத்தவர்.அஷ்டமா சித்திகள் அனைத்தும் கை வரப்பெட்டவர்.
இவர் அகஸ்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சில காலம் தங்க எண்ணி
தான் வாழ்ந்த திருக்கைலையில் இருந்து புறப்பட்டு பொதிகை மலையை
அடையும் பொருட்டு தென் திசையை நோக்கி புறப்பட்டார்.செல்லும் வழியில்
திருக்கேதாரம் ,பசுபதி,நேபாளம்,காசி ,திருப்பருப்பதம்,திருக் காளத்தி,
திருவாலன்காடு,காஞ்சி ஆகிய திருத்தலங்களை தரிசித்து அங்கங்கே வாழ்ந்த
சிவா யோகிகளை கண்டு நட்பு பூண்டார்.
தில்லை சென்ற யோகியார் சிவபெருமானின் திருக்கூத்து கண்டு மகிழ்ந்தார் .
அங்கிருந்து திருவாவடுதுறை இறைவனை காண செல்லும் வழியில்
காவிரிக்கரையில் உள்ள பொழிவினிடத்தே பசுக்கூட்டங்கள் கதறி அழுவதை
கண்டார்.அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே மூலன் என்னும் ஆநிரை
மேய்ப்பவன் தனியாக வந்து பசுக்களை மேய்த்து கொண்டு இருந்தான்.
அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான்.மூலன்
இறந்ததை கண்ட பசுக்கள் அவன் பூத உடலை சுற்றி வந்து அழுது கொண்டு
இருந்ததன.
பசுக்களின் வருத்தம் கண்ட யோகியாருக்கு மனம் பொறுக்கவில்லை .
எனவே அவர் தன் உடலை மறைவான ஒரு இடத்தில் கிடத்தி விட்டு கூடு
விட்டு கூடு பாய்தல் எனும் வித்தை மூலம் அந்த இடையனது உடம்பில்
செலுத்தி திருமூலராய் எழுந்தருளினார். மூலன் எழுந்ததை கண்ட பசுக்கள்
அவரது உடம்ம்பில் நக்கி,முத்தி ,துள்ளிக்குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளி
படுத்தின.மகிழ்ந்த திருமூலரும் பசுக்களை நன்றாக மேய்த்தருளினார் .
அவைகளும் நன்றாக புல்லுண்டு விட்டு காவிரியில் நீரருந்தி விட்டு
சாத்தனூரை நோக்கி நடக்கலாயின.
அவற்றை பின் தொடர்ந்த திருமூலர் ஒவ்வொன்றும் தத்தம் வீடுகளுக்கு
செல்வதை கண்டார். வீட்டில் இருந்து வெளியே வந்த மூலனின் மனைவியும்
மூலன் வடிவில் இருந்த யோகியரை வீட்டினுள் அழைத்தார். அதற்க்கு மூலன் வடிவில் இருந்த யோகியாரோ தான் அவள் கணவன் அல்லன் என்றும்,அவள் கணவன் இறந்து
விட்டதாகவும் எடுத்துரைத்தார்.அதை நம்பாத மூலனின் மனைவியும்
அவ்வூர் பெரியவர்களிடம் முறையிட்டாள் .யோகியரும் மூலனின் உடம்பில்
இருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்தார் .மீண்டும் அவர் மூலனின் உடம்பில் புகுந்தார்.ஊர் பெரியவர்கள் மூலனின்
மனைவியை தேற்றி ஆறுதல் கூறி சென்றனர்.
தன் உடம்பை தேடிய யோகியார் அது கிடைக்காததால் மூலனின்
உடம்பிலேயே தங்கி திருவாவடுதுறை திருக்கோவிலை அடைந்தார்.
அங்கே தியானத்தில் மூழ்கிய அவர் நன்னெறிகளை விளக்கும் திருமந்திரம்
எனும் நூலை ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை கொண்டு
இயற்றிறினார். சேக்கிழாரின் பெரிய புராணம் என்னும் நூலில் திருமூலர்
வரலாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது.அகஸ்தியர் அருளிய பன்னிரு
காண்டம் நூலில் திருமூலர் இயற்றியதாக சில நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அவையாவன
1) திருமூலர் காவியம்-8000
2) திருமூலர் சிற்ப நூல்-1000
3) திருமூலர் சோதிடம்-300
4) திருமூலர் மந்த்ரிகம்-600
5) திருமூலர் சல்லியம்-1000
6) திருமூலர் வைத்திய காவியம்-1000
7) திருமூலர் வைத்திய சுருக்கிடை-600
8) திருமூலர் வைத்திய சுருக்கம்-200
9) திருமூலர் சுட்சும ஞானம்-100
10) திருமூலர் பெருன்காவியம் -1500
11) திருமூலர் தீட்சை விதி-100
12) திருமூலர் கோவை விதி -16
13) திருமூலர் தீட்சை விதி-8
14) திருமூலர் தீட்சை விதி-18
15) திருமூலர் யோகஞானம் -16
16) திருமூலர் விதி நூல்-24
17) திருமூலர் ஆறாதாரம்-64
18) திருமூலர் பச்சை நூல்-24
19) திருமூலர் பெருநூல்-3000
திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும்,கஞ்சமலை சித்தரும்
முக்கியமானவர்கள்.பாண்டிய மன்னரின் ஆணை படி கருஊ ரார் திருமூலரின் சமாதியை மூலவராக கொண்டு சிதம்பரம் கோவிலை
அமைத்தார்.திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு
லிங்கமாக உருவெடுத்த இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி எனும்
பெயரில் ஒரு சன்னிதியையும் சேர்த்து விட்டார்கள் என ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்.
(முற்றும் )
மேற்கூறிய நூல்கள் பெறுவது எங்ஙனம்
ReplyDelete